உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 20.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78

இடம்:

> இளங்குமரனார் தமிழ் வளம் – 20

தாரைக் கபகீர்த்தி வந்ததேன்?

தக்கோர் எனப் பேர் படைப்பதேன்?

மதியினால் மதியினால்

வி-ம் : தாரை = தேவ குரு எனப்படும் வியாழனின் மனைவி தாரை. அபகீர்த்தி = பழி. அவள், குருவின் மாணவனாம் திங்களை விரும்பிப் பழிகொண்டாள் என்பது தொன்ம (புராண)க் கதை மதி = திங்கள்.

தக்கோர் = தகுதியானவர். சான்றோர் அவையிலும் பொதுமக்கள் முன்னும் தக்க பெருமைக் குரியவர் என்று பாராட்டடப்படுவது அவர்தம் அறிவுச் சிறப்பாலேயாகும். மதி = அறிவு. இடம்:

திங்கள் வருவதேன்?

திருவிளக் கேற்றுவதேன்?

(44)

- ஞாயிறு போய் ஞாயிறு போய்

வி-ம் : திங்கள் = நிலவு, திங்கள் கிழமை.

ஞாயிற்றுக் கிழமை போய்விட்டால் திங்கள் கிழமை வரும். இது, உலக முழுவதும் உள்ள வழக்கம் ஆகும்.

ஞாயிறு

=

கதிரோன். கதிரோன் மறைந்து இருள் வரத் தொடங்கும் மாலைப் பொழுதில் வீடுகளில் விளக்கேற்றுதல் வழக்கம். இவ்விளக்கு குத்து விளக்கு ஆகும். இல்லுறை தெய்வமாக விளக்கேற்றி வழிபடுவதால் திருவிளக்கு எனப்பட்டது.

(45)

இ-ம்:

திருடனென்று கட்டுவதேன்?

திரண்டமயிர் சடையாவதேன்?

சிக்கினால் சிக்கினால்

வி-ம் : திருடியவனைக் கையும் களவுமாகக் கண்டு பிடித்தால் தான் திருடன் ஆவான். தப்பிப் போய்விட்டால் திருடவில்லை என்று சாதிப்பான். ஆதலால் அவன் சிக்கினால் தான் பிடிபட்டால் தான் - திருடன் ஆவான். அவனைக் கட்டிவைத்து ஊர்க் கூட்டத்தில் நிறுத்துவது பழைய வழக்க மாகும்.

L

-