உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 20.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இருசொல் அழகு

77

வி-ம் : குறையில்லாததும் அரசு முத்திரை உள்ளதுமாம் பணம் செல்லும் பணம். அவற்றில் குறை யுடைய பணம் செல்லாப் பணம். செல்லாப் பணத்தைச் செலுத்த நினைப்பார் வட்டக் காசு (தள்ளுபடிக்காசு) தந்து மாற்றிவிடுவர். வட்டம் = வட்டக் காசு; ஒரு ரூபாயை முக்கால் ரூபா, அரை ரூபா என மாற்றல்.

ம்

பருந்து நேராகப் பறந்து செல்லாமல் வட்டமிட்டுப் பறப்பதே வழக்கம். அதன் வட்டம் கீழே கிடக்கும் உணவு பற்றிய பார்வையதாகவும் இருக்கும்.

இ-ம் : ம

தனந்தேடி உண்ணாமல் புதைப்பதேன்? தரணியில் அமரபட்ச மாவதேன்?

(41)

மதிகுறைந்து மதிகுறைந்து

வி-ம்:பொருளைத் தேடுவது உணவு, உடை முதலியவற்றில் தட்டு இல்லாத வாழ்க்கை கொள்வதற்கே. ஆனால் சிலர் பாடுபட்டுத்தேடிய பணத்தைப் பயன்படுத்தாமல் கருமித்தனமாக வாழ்வர். அப்பணம் கள்வர்க்கோ பிறர்க்கோதான் பயன்படும். இதற்குக் காரணம் அவர்களின் அறிவுக் குறைவேயாம். மதி அறிவு.

=

அமரபட்சம் என்பது முழுமதி நாளில் இருந்து தேய்ந்து கொண்டே வந்து காருவா எனப்படும் அமாவாசை நாளாதல். மதியாகிய நிலவு, குறைந்து வருவதால் நேர்வது இது. இ-ம் :

தாதன் பிச்சை எடுப்பதேன்?

தண்டனைக் குட்பட்டிருப்பதேன்?

(42)

தப்பையிட்டு தப்பையிட்டு

வி-ம் : தாதன் = அடிமை. தமக்கென எந்த உரிமை யும் இல்லாமல் சிலரை அடிமையாளாகக் கொண்டது பழங் காலத்தில் உலகளாவிய நிலையில் இருந்தது. அவர்கள் வீடு நிலம் இல்லாமல் ‘தப்பு' என்னும் பறையைக் கொட்டிப் பிச்சை எடுத்து உண்டு வாழ்ந்தனர். தப்பு= தோற்பறைகளுள் ஒன்று.

ஒருவருக்குத் தண்டனை கொடுக்க வேண்டுமானால் அவர் ஏதோ ஒரு தப்பு (பிழை, குற்றம்) செய்தவராக இருக்க வேண்டும். அத் தப்புக்காகத் தண்டிக்கப்பட்டான் என்பதாம்.

(43)