உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 20.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76

இளங்குமரனார் தமிழ் வளம் – 20

குறிப்பு : அடுத்துவரும் இருசொல் அலங்காரம் ஐந்து, சொல்லழகு கொண்டிருந்தும், பொருள் இடக் கரடக்குக் கொண்டு இருப்பதால் இவ்வரிசையில் சேர்க்காமல் தள்ளப் பட்டன. பண்பாட்டுச் சிதைவுக் கதை, படம், ஓவியம், காவியம், கலைகள் ஆகியவற்றைத் தீண்டாமைப் பொருளாகத் தள்ளும் நிலைநாட்டில் ஏற்படாமல் பழம்பெருமை சொல்லல் இழிமையைப் பெருக்கிக்காட்டவே உதவும் என்பதால் விலக்கப்பட்டன. ஐந்தும் சிறுக்கியை முன் வைத்துச் சொல்லப் பட்டவையாம். பின்னும் இத்தகையன விலக்கப்பட்டன.

இடம் :

சீதையை இராமன் பிரிந்ததேன்?

துரியனுக்குத் தீம்பு வந்ததேன்?

அம்மானையிட்டு அம்மானையிட்டு

வி-ம்: சீதையை இராமன் மாரீசன் என்னும் மாய மானால் பிரிந்தான். அம்மான் என்பதை அ + மான் எனப் பிரித்து அந்த மான் அல்லது அழகிய மான் எனப் பொருள் கொள்ள வேண்டும்.

துரியன்= துரியோதனன். அவனுக்கு மாமன் சகுனி என்பவன். சகுனியே சூதுபோர் செய்து பாண்டவரை வெல்லலாம் என வழி கூறி நடத்திக் காட்டியவன். அதனால் துரியோதனன் முதலியவர் அனைவரும் அழிந்தனர். அம்மான் = மாமன்.

இ-ம்:

சீநீர் வடிவதேன்?

=

சிவன் பிச்சை எடுப்பதேன்?

(39)

சிரசை யிட்டு சிரசை யிட்டு

வி-ம் : சீநீர் = சீழ்நீர். காதில் இருந்து வழியும் நீர் 'சீழ் நீர்’ எனப்படும். அது காதின் உள்ளாகத் தலைப் பகுதியில் உண்டாகும் அழற்சி நோயின் நீராகும். சிரசு = தலை.

சிவன் கையில் கொண்டு பிச்சை எடுப்பது நான் முகனின் மண்டையோடு என்பது தொன்மக் கதை. ஐந்து தலைகளுள் ஒன்றைத் திருகி எடுத்தபின் நான்முகன் ஆனான் என்பது அது. (40)

இ-ம்:

செல்லாப் பணம் செல்லுவதேன்?

செம்பருந்து பறப்பதேன்?

- வட்டமிட்டு வட்டமிட்டு

·