உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 20.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இருசொல் அழகு

இடம் :

சித்திரம் பொன்னிற மாவதேன்?

சீரான லங்கை எரிவதேன்?

75

அரிதாரத்தால் அரிதாரத்தால்

வி-ம்: மாற்றுக் குறைந்த மாழை (சித்திரம்) எரியூட்டிக்காய வைத்து அரிதாரம் என்னும் பொடியைத் தூவுதலால் பொன்னாகக் காட்சிவழங்கும். இது,அரக்குபொன்னிறமாவதேன் என முன்னும் கூறப்பட்டு 'அரிதாரம்' என்னும் விடையும் தரப்பட்டது (5) து சிறப்புமிக்க இலங்கை அரியின் (இராமனின்) தாரத்தால் (மனையாளாய சீதையால்) எரியூட் டப்பட்ட தாம். அங்கே (5) அனுமார் இலங்கை போவதேன்” எனப்பட்டது. (36) இ-ம் :

66

சிறிய ஊர் பட்டண மாவதேன்?

வெறியர் மயங்கித் திரிவதேன்?

குடியேறி குடியேறி

வி-ம் : சிற்றூர்களில் வாழ்பவர் கல்வி, தொழில், பதவி வாய்ப்பு முதலியவற்றின் காரணமாகத் தம் ஊர்களை விட்டுப் பட்டண வாழ்வினராகின்றனர். அவர்கள் குடியேறுவதால் மக்கள் பெருகி நகராய், மாநகராய் விரிவாகின்றது.

வெறியர் என்பார் குடியின் மீது மிகு விருப்புடையவர். ஓயாமலும் மிகவும் குடித்தலால் மதி மயங்கிக் கிடக்கும் இடம், நிலை என்பவை அறியாமல் கிடக்கின்றனர். அதற்குக் காரணம் குடி(ப்பு) ஏறுதலாம். (37)

இ-ம்:

சிறுக்கி காது பருப்பதேன்?

தெருவில் பந்தல் போடுவதேன்?

ஓலையிட்டு ஓலையிட்டு

வி-ம் : சிறுக்கி - சிறுமி, சிறுபெண். முன்னாளில் காது குத்தி முதற்கண் பழுப்பு, தக்கை ஆகியவை வைத்து, அதன்பின் ஓலையிடுவது வழக்கம். ஓலை என்பது பனை ஓலை. அதுவே காதோலை, தாலி, குடவோலை, ஓலைச் சீட்டு, நூற் சுவடி ஆகியவற்றுக்குப் பயன்பட்டது.

L

L

தருவில் போடும் பந்தலுக்கும் ஓலை பயன்பட்டது. குடிசை முகடு ஓலையால் வேயப்பட்டது. கீற்றினும் வலியது ஓலையாம்.

(38)