உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 20.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74

> இளங்குமரனார் தமிழ் வளம் – 20

வி-ம் : சேறுபட உழுதல் என்பதால் நெல் நடவு செய்யும் வு நன்செய் நிலம் அது. நன்செய் நடவுக்கு நடும் தேர்ச்சி யுடையவர் இல்லாமல் முடியாது. ஆதலால் நடவு செய்வார் கிடையாமையால் உழுத சேறு நடப்படாமல் கிடப்பதாயிற்று.

சீனி என்பது படகில் உள்ள பாய்மரத் தூண்; அதில் ழுத்துக்கட்டப்படுவதே பாய் ஆகும். பாயையும் தூணையும் இணைக்கும் கட்டு கயிறு 'நடு வார்' ஆகும். அது, அறுந்து போனால் பாய் சாய்ந்து விடும். நடுவார் = ஊடு கட்டு வார்.(33) ஊரில் வியாபாரம் நடப்பதேன்?

இ-ம்:

உடம்பு சுளுக்கு வாங்குவதேன்?

வி-ம் : செட்டு

- செட்டியினால் செட்டியினால் வாணிகம். அதனைச் செய்பவர் செட்டியார் எனப்பட்டனர். தொழில் வழிப் பெயர்களே சாதிப் பெயரானமை இது. ஊரில் வணிகம் நிகழ்வது, வணிகராலேயே யாம் என்னும் பொருள் மக்கள் வழக்கில் உண்டு.

நரம்பு திடுமென்று இடமாறியோ வளைந்தோ போவதே சுளுக்கு ஆகும். அதனை நீவியும் மருந்து பூசியும் சரிசெய்வர். செட்டும்செட்டிஎனப்பட்டது ஒருமைப்படுத்தும் வகையிலேயாம்.

இ-ம்:

ர்ப்பன்றி கொழுப்பதேன்?

உள்ளம் மயங்கித் தி(ரிவதேன்?)

(34)

- மலமிக்கதனால் மலமிக்கதனால்

வி-ம் : மக்கள் கழிப்பு, பன்றி உணவாகக் கொள்ளும் நிலைமை சிற்றூர்களில் இருப்பதால் மலம் மிகுந்தால் பன்றி கொழுக்கும் எனப்பட்டது.

மக்களுக்கும் உள்ளம் நெறியற்றுச் செல்ல மும் மலங்களே மூலம் என்பது சைவ சமயக் கொள்கை. அவை ஆணவம், கன்மம், மாயை என்பர். இம் மலங்களின் மிகையே உள்ளம் நெறிகெட்டுச் செல்லச் செய்வதாம்.

.

முன்னது: கழிவாகிய மலம்; உடற்சார்பு

பின்னது: மயக்குவதாம் மலம்; உளச்சார்பு.

(35)