உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 20.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இருசொல் அழகு

73

உதவ மாட்டான்” என்றும், “அடியாத பிள்ளை படியாது என்றும் வழங்கும் பழமொழிகளே முன்னதன் விளக்கம்.

99

மரங்கள் வேர்ப் பிடிப்பு நன்றாக இருந்தால் பெருங் காற்றிலும் வீழா. அடி -வேர்ப்பிடிப்பு - அற்றுப் போனால் காற்று இல்லாமலும் வீழும். ஆற்றங்கரை மரம் ஆற்றரிப்பால் வீழலும் காணலாம். அடி = வேர்; அடியற்று = வேரற்று. (30) இ-ம்: ஈசுவர வருடம் பிறப்பதேன்?

இருந்தாற் போலிருந்து சாவதேன்?

தாதுபோய் தாதுபோய்

வி-ம்:அறுபது ஆண்டு என்னும் வரிசையில் தாது என்னும் ஆண்டுக்கு அடுத்த ஆண்டு ஈசுவர ஆண்டாகும். ஆதலால் அவ்வருடம் பிறக்க தாது வருடம் போய்விடும் என்பதாம்.

உயிர் ஊட்டமாவது தாது எனப்படும். அத்தாது இல்லாமல் போய்விட்டால் வேறு நோய் நொடி இல்லாமலும், இருப்பார் போல் தோன்றி இல்லாமல் போய்விடுவார் என்பதாம். இடம்:

உயர்ந்த மெத்தை மீது ஏறுவதேன்? உலை வாய்க்கு அரிசி இடுவதேன்?

(31)

படிகொண்டு படிகொண்டு

வி-ம்: மெத்தை = மாடி. மாடிமேல் ஏறுவதற்கு ஏணிப்படி வேண்டும். அல்லது படிக்கட்டு வேண்டும். இந் நாள் போல் முன்னாளில் ‘தூக்கி’ (லிப்ட்) என்பது இல்லை. ஆதலால் படி கொண்டேஏறவாய்த்தது.

பொங்கி ஆக்கும் உலையில் அரிசி இவ்வளவு எனப் படியால் அளந்தே இடுவர். படி என்பது நாழி என்னும் முகத்தல் அளவுக் கருவி. அரைப்படி, கால்படி, அரைக்கால்படி, மாகாணிப் படி, பெரும் படி, சிறுபடி என்பவை இருந்தன. பெரிய அளவைக் கருவி மரக்கால்.

(32)

இடம்:

ழுத சேறு கிடப்பதேன்?

ஓங்கிய சீனி சாய்வதேன்?

நடுவாரற்று நடுவாரற்று