உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 20.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72

இளங்குமரனார் தமிழ் வளம் – 20

இராமன் பிறந்ததே அரக்கரை - இலங்கையை - அழிக்க என்பது தொன்மம் (புராணம்). ஆதலால் இலங்கை அழிவு கூறப்பட்டது.

இ-ம்:

இருப்புக் கொப்பரை யாவதேன்?

யாவரும் சந்தை யேறுவதேன்?

(27)

- கொள்ளவிக்க கொள்ளவிக்க

வி-ம்:கொப்பரை என்பது அண்டா.பெருஞ்சமையலுக்குப் பயன்படும் ஏனம். அது இரும்பால் செய்யப்படுவதும் உண்டு. அதனால் இருப்(ம்)புக் கொப்பரை எனப்படும்.

கொள் குதிரை விரும்பி உண்ணும் உணவு. அதற்குப் பெரிய கொப்பரையில் போட்டே அவிப்பர். ஆதலால், கொள் அவிக்க எனப்பட்டது.

சந்தைக்குப் பொருள் கொள்ள (வாங்க) விற்க (விக்க) எவரும் செல்வார் என்பதாம்.

(28)

இ-ம்:

இருமா வீச மாவதேன்?

இறைக்கும் ஏத்தம் நிற்பதேன்?

முக்காணி போல் முக்காணி போல்

வி-ம் : இருமா = இரண்டு மா என்னும் பழங்கால அளவு. 20 மா ஒன்று. முக்காணி என்பதும் சிற்றிலக்கத்துள் ஒன்று. இரண்டு மா அளவில் முக்காணி அளவு போய் விட்டால் வீசம் என்னும் அளவு ஆகும். ஆதலால் முக்காணி அளவு குறைந்து போயதைக் கூறுவது முதலது.

இறைக்கும் ஏற்றத்தில் முக்காணி என்பது ஓர் உறுப்பு. இறைசாலையும் வடத்தையும் இணைத்துக் கட்டும் இரும்புச் சங்கிலி. திருகு வளையம் உள்ளது. அது கெட்டுப் போனால் சரி செய்தே ஏற்றம் இறைக்க முடியும். (29)

இ-ம் :

இளமையில் பிள்ளை கெடுவதேன்? எங்கும் மரங்கள் வீழ்வதேன்?

அடியற்று அடியற்று

வி-ம்:“அடித்து வளர்க்காத பிள்ளையும் திருக்கி வளர்க்காத மீசையும்” என்றும், “அடி உதவுவது போல் அண்ணன் தம்பி