உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 20.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இருசொல் அழகு

இ-ம்:

ஆறிடம் கொள்வதேன்?

71

வாய்மதம் பேசுவதேன்?

தடுப்பாரற்று தடுப்பாரற்று

வி-ம்: காட்டு ஆறு, கட்டற்ற சேதமாக்கும். கரையை டிக்கும் வெள்ளமும், ஊரை அழிக்கும் வெள்ளமும் உண்டு. வெள்ளத் தனைய இடும்பை என்பது வள்ளுவம். வலுவான அணை கட்டினாலும் தாங்காவெள்ளம் வரும்போது, அந்நீரைப் பிரித்துக்கொள்ளுமாறு செய்த ஆறே கொள்ளிடம் என்பதாம். மேல் நீர் கொள்ள அமைந்த இடம் கொள்ளிடம். அது வெள்ளத் தடுப்பு ஆகும்.

·

சிலர் தட்டிக் கேட்க ஆள் இல்லை என்றால் குதித்துக் குதித்து ஓங்கி ஓங்கிப் பேசுவர். அவரை அடக்கும் ஒருவரைக் கண்டதும், வாலை ஒடுக்கு வதுபோல் வாயை ஒடுக்கிக் கொள்வர். தடுப்பார் = தடுப்பவர்.

(25)

இ-ம்:

இந்து நிறைவதேன்?

இராமன் சீதையைப் பிரிவதேன்?

கலையினால் கலையினால்

வி-ம்: இந்து = நிலவு. பிறை மதியாகத் தோற்றம் தந்து நிறைமதியாக வளரும் நிலையைக் ‘கலை' என்பர். நாள்தோறும் வளர்தலும் தேய்தலும் கலை எனப்படுதலைக் குறிப்பது முன்னது. சீதை வனத்தில் இருக்கும் போது மாரீசன் மானின் வடிவாக வந் தான். மாயமானைக் கண்டு மயங்கிய சீதை அதனைப் பிடித்துத் தருமாறு வற்புறுத்தினாள். அம் மானின் மாயத்தால் இராமன் சீதையைப் பிரிய நேர்ந்தது. கலை = மான். இ-ம்:

இந்து மறைவதேன்?

இலங்கை அழிவதேன்?

(26)

இராமன் தாரத்தால் இராமன் தாரத்தால்

வி-ம்: இராமன் = கதிரோன். தாரம் (அவதாரம்) தோற்றம். கதிரவன் தோன்றியதால் நிலவின் ஒளி மறைந்து போனது. நிலவு பகலில் இருந்தாலும் அதன் ஒளியோ இருப்போ புலப்படுதல் அரிது ஆதலால் மறைவு எனப்பட்டது.