உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 20.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70

இளங்குமரனார் தமிழ் வளம் – 20

இரவுப்பொழுதில் நடந்தால் வழிப்பறிக்கு ஆட்பட நேரும் என்றால் இரவில் வழிநடக்க மாட்டார். இரவில் வழி நடந்தால் வழிப்பறி செய்வார் இல்லை என்பது பொருளாம். பறிப்பார் இலைபறிப்பார்; வழிப்பறி செய்வார்.

இ-ம்:

ஆலிலை பறிப்பதேன்?

(22)

=

அனுமார் இலங்கைக்குப் போவதேன்?

தையலை யிட்டு தையலை யிட்டு

வி-ம்: ஆலிலையைத் தைத்து உண்கலமாகப் பயன் படுத்துவார் அதனைப் பறிப்பர். அது பொதுமரம். எல்லாரும் தேவைக்குப் பயன்படுத்த வாய்த்தது. செலவற்றது. அதனைப் பறித்துக் காம்பு வெட்டி, சோளத் தட்டை ஈர்க்கால் தைத்து உண்கலமாக்கிக் கொள்ளல் சிற்றூர் வழக்கம். தையல் = தைத்தல் தொழில்.

அனுமார் இலங்கைக்குச் சென்றது சீதை அங்கே ருக்கிறாளா? என்பதைக் காண்பதற்கேயாம். ஆதலால் சீதை என்னும் பெண்ணைப் பார்க்க வேண்டிச் சென்றார். தையல் = பெண்.

இ-ம்:

.

ஆழப்பட வெட்டுவதேன்?

நேரப்படக் குத்துவதேன்?

(23)

தண்ணீர் காண தண்ணீர் காண

வி-ம்: வெட்டுதல், கிணறு வெட்டுதல். நன்செய் புன் செய்ப் பயிர்களுக்கு நீர் விடுதற்கு ஆறு, கால் இல்லா நிலையில் கிணறே பயன்படும். கிணற்றில் தண்ணீர் காணும் அளவும், தம் தேவைக்குத் தண்ணீர் கிடைக்கும் அளவும் ஆழமாகத் தோண்டலும் வெட்டலும் வேட்டுப் போடலும் (வெடிவைத் தல்) கம்பி போட்டுக் குடைதலும் வழக்கம். எதற்காக வெட்டுதல், குத்துதல் எனின் தண்ணீர் காண்பதற்கு என்பதாம்.

இலை தழைகளில் சாறு கொள்ள விரும்புவார் நெடுநேரம் இடித்துப் பிழிவு கொள்வதை எண்ணலாம். வேறு வகையும் கருதுவர் போலும்!

(24)