உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 20.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இருசொல் அழகு

69

வி-ம்:மெட்டை என்பது ஆயத்துறை. கடல் வழியாக வரும் பொருள் மேடேறும்; மேட்டில் இருந்த பொருள் கடலில் இறங்கும். இரண்டும் மெட்டை வழியேதான் செல்ல வேண்டும். அப்படிச்சென்றால் மெட்டையின் முத்திரையோடு சென்றதாம். மற்றவை கடத்தல் குற்றம் உடையவை. மெட்டை-ஆயத்துறை. இறுத்தல் = செலுத்துதல்.

அணிகலங்களுள் ஒன்று மெட்டி மகளிர் காலில் அணிவது. அதுவும் திருமணம் கொண்டவர் என்பதன் அடையாளம். அது விரலில் இறுக்கமாக அணியப்படுவதால் விரல் சிவந்து தோன்றும். இ-ம்:

ஆரைச் சுவர் கட்டுவதேன்?

ஆண்டி குல்லா போடுவதேன்?

(20)

-தலைமறைய தலைமறைய

வி-ம் : ஆரைச் சுவர் = சுற்றுச் சுவர். குளிக்க கழிக்க உரிய ம் எனினும், வீட்டுச் சுற்று எனினும், அரண்மனை கோயில் எனினும் மறைப்புச் சுவர் எழுப்பப்படுதல் உண்டு. ஆரை என்பது மதில் என்றும் மறைவு என்றும், வளைவு, வேலி என்றும் பொருள் தரும்.

குடும்பத்தவனாக இருந்த ஒருவன், வீட்டுச் சோறுண்டு வாழ்ந்த ஒருவன் பிச்சை எடுக்கத் தெருவுக்குப் போக நேர்ந்தால் அடையாளம் தெரியாமல் இருக்க, தலைப்பாகை, முக்காடு, குல்லா என புனைதல் வழக்கம். எல்லாம் இன்னார் என்பதை மறைத்துக் கொள்ளத்தான்.

இனி, பிச்சை எடுப்பவன் கும்பிடு போடுதலையும் பின்னது குறிக்கும்.

இ-ம் :

ஆலிலை பழுப்பதேன்? இராவழி நடப்பதேன்?

(21)

பறிப்பாரற்று பறிப்பாரற்று

வி-ம்: ஆலிலையைப்பறித்துத்தைத்து உண்ணும் இலையாகப் பயன்படுத்துதல் உண்டு. அப்படிப் பயன்படுத்தினால் இலை பசுமையாக இருக்கும் போதே பறிக்கப்பட்டு விடும். அது பழுக்க நேராது. ஆதலால் பறிப்பார் இல்லாமையால் நேர்ந்தது அது.