உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 20.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68

இளங்குமரனார் தமிழ் வளம் – 20

குந்தி என்பவள் பாண்டு என்பவன் மனைவி. அவள் பிள்ளைகள் பாண்டவர். அவர்கள் தருமன் முதலிய ஐவர். அவர்கள் குந்தி என்பாள் பிள்ளைகள் ஆதலால் குந்தி வயிற்றி லிருந்து பிறந்தவர் என்பதாம். இருதாய் மக்கள் எனினும் ஒரு தாயாகக் கொண்டு உரைத்தது இது.

இ-ம்:

ஆட்டுக் கறி கசப்பதேன்?

ஆண்டி பட்டினி யிருப்பதேன்?

(17)

பிச்சை எடாமல் பிச்சை எடாமல்

வி-ம்: ஆட்டுக் கறியில் பித்து முதலியவற்றை அகற்றி எடுத்தே கறியாக்குவர். அவற்றை எடுக்காமல் ஆக்கிவிட்டால் கசப்பாக இருக்கும் என்பது முதற் செய்தி. பிச்சு= பித்து.

L

இரண்டாம் செய்தி வெளிப்படை. ஆண்டி, வீடுக ளுக்குச் சென்று பிச்சை வாங்கப் போகாவிட்டால் பட்டுணியாகவே இருக்க வேண்டி வரும்! பட்டினத்தடிகளைப் போல என் பசிக்கு எடுத்துக்கொண்டு வந்து தாமே தந்தால் அன்றி உண்ணேன் என எத்தனை பேர் இருக்க முடியும்?

இ-ம்:

ஆட்டுக் குட்டி ஊட்டுவதேன்?

அரிசி கடன் வாங்குவதேன்?

(18)

முட்டிமுட்டி முட்டிமுட்டி

வி-ம்: ஆட்டின் மடுவில் இருந்த பாலைக் குட்டி முட்டாமலே குடிக்கும். மேலும் தேவை என்றால் முட்டி முட்டிப் பால் சுரக்கச் செய்து குடிக்கும். முட்டி முட்டி என்பது அடுக்கு.

சட்டி முட்டி என்பது இணைச் சொல். சட்டியில் சிறியது முட்டி. தட்டு முட்டு என்பது அத்தகையதே. முட்டியில் இருக்கும் அரிசி இல்லை என்றால் அதனைக் கொண்டுபோய் அடுத்த வீட்டில் அளவாக வாங்கி வந்து, அளவாகத் தருவது வழக்கம். அது குறி எதிர்ப்பு எனப்படுதல் இலக்கிய வழக்கு. கொண்டு மாற்று என்பது மக்கள் வழக்கு.

இ-ம்:

ஆயம் எவரும் இறுப்பதேன்?

அரிவையர் கால் விரல் சிவப்பதேன்?

(19)

- மெட்டை இட்டு மெட்டை இட்டு