உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 20.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இருசொல் அழகு

இ-ம்:

ஆடவர் காது சிறப்பதேன்?

67

அடாத சொல்லைத் தடுப்பதேன்?

- ஒட்டிட்டு ஒட்டிட்டு

வி-ம்:ஆண்களும் கடுக்கன்,குண்டலம் முதலிய காதணிகளை அணிந்து முன்பு பொலிவாகத் தோற்றம் தந்தனர். பொன்னில் முத்துப் பதித்து அணிந்த காதணியைப் பொன்னப்பர், முத்து என்னும் புலவர்கள் “பொன்னும் முத்தும் அழகப்பா" என்ற செய்தி வரலாற்றில் உண்டு. ஒட்டு என்பது காதில் ஒட்டப்படும் அணிகலம்.

அடுக்காத பழியைச் சொல்வாரை உண்மை சொல் - சத்தியம் செய் என்பது வழக்கம். கோயிலில் வந்து கூறு என்பதும் உண்டு. இவ் வுண்மைக்கு ஒட்டு என்பது பெயர். ஒட்டாரம் என்பதும் அது. (15)

இ-ம்:

ஆடு தழை மேய்வதேன்? அதிகாரம் மாறுவதேன்?

துறையிட்டு துறையிட்டு

வி-ம்: ஓரிடத்து நின்று மேய்தல் இல்லாதது ஆடு. என்ன பசுமையான இடமாக இருந்தாலும் அங்கே இருந்து அயலிடம் பார்ப்பதே அதன் இயல்பு. இக்கரைக்கு அக்கரை பச்சை என்பது அதன் வழியாக ஏற்பட்ட பழமொழி. துறை =மேய்ச்சல் இடம்.

L

L

அலுவல் பார்ப்பவர் அலுவல் மாற மாற அதிகாரமும் மாறும். அதிகார மிக்க பணி, அதிகாரமே இல்லாத பணி, ஏந்தான வாய்ப்புப் பணி, எடுபிடியே இல்லாத பணி எனப் பணித்துறைகள் அரசில் உண்டு. அத் துறைக்குத் தக்கவாறு அதிகாரம் மாறுபடும். துறை = பதவி நிலை. இ-ம்:

ஆடு கறப்பதேன்?

(16)

ஐவர் பிறப்பதேன்?

குந்தியிருந்து குந்தியிருந்து

வி-ம்: ஆட்டில் பால் கறக்க அதன் மடுவைப் பற்றிக் கறக்குமாறு உட்கார்தல் - குந்தியிருத்தல் - வேண்டும். குந்துதல் குத்துக்கால் இ டு இருத்தல்.

=