உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 20.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

இளங்குமரனார் தமிழ் வளம் – 20

அறுமானால் தையல் போட்டு ஒட்டும் வழக்கம் குறிப்பது முன்னது. தைத்தல் தொழில்.

அறனெனப் பட்டதே இல்வாழ்க்கை என்னும் இல்லறத்திற்கு இல்லாள் இல்லை என்றால் சிறவாது. ஆதலால் தையலாகிய L மனையாளை இழந்துவிட்டால் இல்லறச் சிறப்பு ஒழிந்து போகும் என்பது பின்னது. தையல் = பெண், மனையாள்.

இ-ம்:

அறுத்த கொல்லையில் அறுப்பதேன்?

அடுத்துக் கடன் கேட்பதேன்?

(12)

சீட்டைப் பார்த்து சீட்டைப் பார்த்து

வி-ம்: கொல்லை என்பது தோட்டத்து இடம். பெரும்பாலும் கீரை (அறைக் கீரை) பயிரிடுவது வழக்கம். அறுத்த பாத்தியில் மீண்டும் அறுக்க இத்தனை நாள்கள் ஆகும். என்னும் வழக்கம் உண்டு. தேங்காய் பறிக்க, தோப்புகளில் அப்படிக் குறிப்புகள் உள்ளது போன்றது அது.

அவ்வாறே இவர் கடன் இன்னும் வரவேண்டும், வந்து விட்டது என்பதை அறிந்து கடன் கேட்கவும் சீட்டை (கணக்குச் சீட்டை)ப் பார்க்கும் வழக்கம் உண்டு. சீட்டுப் பார்த்தல் இருவகைக்கும் பொது.

இ-ம்:

ஆடவர் தலையாற்றுவதேன்?

அரவு விடம் போவதேன்?

(13)

குடுமியிட்டு குடுமியிட்டு

வி-ம்: ஆடவர் முன்னர்க் குடுமி வைத்திருந்தனர். தலைக் முழுக்குச் செய்தால் குடுமியை இந்நாளில் மகளிர் உலர்த்துவது போல் காற்றில் உலரச் செய்வர். “குடுமி அவிழ்ந்தவனோடு போர் புரிதல் ஆகாது” என்பது போர் நெறி என்பதால் படை வீரரும் குடுமித் தலையராக இருந்தமை புலப்படும் (தொல். நச். உரை).

பாம்பு நஞ்சு இறக்கக் கூடிய மருந்து விற்பவன் குடுமி எனப்படுதலும், பாம்பாட்டி ‘குடுமி’ எனப்படுதலும் உண்டு. அதனால் அவனைக் கொண்டு விடம் போக்குதல் குறித்தது பின்னது. (சான்று: மருத்துவ அகராதி; மரு. சாம்பசிவனார்) (14)