உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 20.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இருசொல் அழகு

65

அன்ன தானச் சத்திரம் பழநாளில் பெருநகரங்களில் எல்லாம் இருந்தது. சத்திரப்பட்டி என்றும் சத்திரம் என்றும் ஊர்ப் பெயர்கள் உண்டு. மதுரை மங்கம்மாள் சத்திரம் புகழ் மிக்கது. “சத்திரத்தில் சாப்பாடு" என்பது பழமொழி.

இ-ம்:

அவரை பூப்ப தேன்?

ஆரூர்த் தேர் ஓடுவ தேன்?

(9)

கொடியேறி கொடியேறி

வி-ம்: கொடி வகையுள் ஒன்று அவரை. அதற்குப் பந்தல்

ட்டு, டு, கொடியை அதில் ஏற்றிப் படர விடுதல் வழக்கம். படர் கொடியாய அது, படராமல் சுருண்டால் பயன்தராது. ஆதலால் பந்தலில் கொடிபடரல் குறித்தது முன்னது.

தேர் ஓட்டம் ஊரில் நடைபெற வேண்டுமானால், கோயிலில் திருவிழா நிகழும். திருவிழாவின் தொடக்கமாக நிகழும் நிகழ்ச்சி கொடியேற்றமாகும். ஆதலால் கொடி ஏற்றமாகித் தேர் ஓடுதல் பின்னது ஆயிற்று.

இ-ம்:

அழகிய மச்சு வீடு இடிவதேன்?

அத்தம் உச்சமாவதேன்?

(10)

உத்தரம் சாய்ந்து உத்தரம் சாய்ந்து

வி-ம்: மச்சு வீடு, மாடிமேல் மாடி எழுப்பப்பட்ட வீடு; மேலுள்ள தளத்தைத் தாங்கும் வலிய பெரிய ஊடு மரம் உத்தரம் ஆகும். அது சாய்ந்து விட்டால் வீடு இடிதல் உறுதியாம்.

அத்தம் (அஸ்தம்) ஒரு விண்மீன்; அது உத்தர விண்மீன் மறைந்தபின் உச்சநிலையை அடையும். 'முன்னை உத்தரம். மரக்கட்டை; பின்னை உத்தரம், விண்மீன், சாய்தல் இரண்டற்கும் பொது வினை.

இ-ம்:

அறுந்த காது கூடுவதேன்?

சிறந்த வாழ்க்கை வாடுவதேன்?

(11)

தையலை விட்டு தையலை விட்டு

வி-ம்: தமிழ்ப் பெண்கள் வழக்கத்தில் காது வளர்த் தல் ஒரு கலை. தண்டட்டி, பாம்படம் முதலியவற்றை அணிந்து வடிந்து வீழ் காதினராக வாழ விரும்பினர். அந்நிலையில் காது