உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 20.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64

இளங்குமரனார் தமிழ் வளம் – 20

அசடர் = சோம்பேறி. உழைக்காமல் இருப்பதற்காக இல்லாத காரணங்களை இட்டுக்கட்டி

சோம்பேறிகள் வழக்கம். சாக்கு=பொய்க்காரணம்.

“காரணம் சொல்பவன் கடமை செய்யான்”

உரைப்பது

(6)

இ-ம் :

அரைக் கீரை விதைப்பதேன்?

கட்டியடித்து கட்டியடித்து

அபராதம் வாங்குவதேன்?

வி-ம்: அறுகீரை (அறைக் கீரை). கீரை விதை மிகச் சிறியது. மிக ஆழமாக மண்ணுள் போதலோ, விதை மேல் பெருங்கட்டி கிடத்தலோ முளை ஆகாது பயிரிடும் நிலத்தில் கட்டி இல்லாமல் புழுதியாக்கு தல்கட்டி அடித்தலாம்.

திருடு முதலிய குற்றம் செய்தவனைத் தண்டிப்பது கை, காலைக் கட்டிவைத்தோ, ஆளையே கட்டி வைத்தோ நிகழ்த்துதலைக் குறிப்பது.

இ-ம் : :

அரைக்கீரை முளைப்பதேன்?

(7)

கிளிப்பிள்ளை வளர்ப்பதேன்?

-பேசிவிக்க பேசிவிக்க

வி-ம்: அறைக் கீரையைப் பயிர் செய்வது விலைபேசி, விற்பதற்காக என்பது; 'பேசி விக்க' எனக் கொச்சை யாயது. அது பேச்சு வழக்கு. சோறு எங்கே விக்கும் (விற்கும்) என்று கேட்க, ஒரு புலவர் தொண்டைக் குள் விக்கும் என்றதை நினைக்கலாம்.

கிளிப்பிள்ளை வளர்ப்பது ‘பேசுவிக்க' என்பது பேசிவிக்க எனப் பிழையாயது. இரண்டையும் பொருத்த வேண்டி இவ்வாறு வழுப்படுதல் பலவாதல் அறியக் கூடியது. இ-ம்:

அரையாப்புக் கட்டி வாங்குவதேன்? அன்னதானம் செய்வதேன்?

(8)

சத்திரமிட்டு சத்திரமிட்டு

வி-ம்: அரை யாப்புக் கட்டி, தொடையில் வரும் ஒருவகைக் கட்டி அதனை அகற்றச் செய்யும் அறுவையைச் 'சத்திரம்' என்பார். சல்லியக்கிரியை என்று கல்வெட்டு அதனைக்குறிக்கும். ‘உனக்குச் சத்திரம் வைக்க' என்பது வசைச் சொல். சத்திரம் + இட்டு.