உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 20.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இருசொல் அழகு

63

வி-ம் : அந்தணர் என்போர் அறவோர் என்பது தமிழ்நெறி. அந்நெறி மாறி வேதம் ஓதுவோர் அந்தணர் எனப்பட்ட நிலையில் வெளிப்பட்டது இது. மறை வடமொழி வேதம்; வேதத்தை மனத்தில் கொண்டிருந்து.

ஆணியின் தலையில் உள்ள ஊடு பள்ளம் மறை (வரி) ஆகும். அதன்மேல் உளி வைத்துத் திருப்பினால் ஆணியும் சுழலும். மறை + இருந்து.

இ-ம் :

அரக்கர் இலங்கை அழிவதேன்? அடுப்பிற் சாதம் கொதிப்பதேன்?

(3)

தீயிட்டு தீயிட்டு

வி-ம்: இராவணனால் ஆளப்பட்ட இலங்கை அனுமனால் எரியூட்டி அழிவு செய்யப்பட்டது என்பது இராமாயணம்.

6

அடுப்பில் தீயிட்டு எரித்தலால் உலை கொதித்து, அதில் போடப்பட்ட அரிசியும் கொதித்து, சோறு ஆக்கப்படுகிறது. இரண்டும் தீ இடுதலால் நேர்ந்ததும், நேர்வனவும் ஆம்.

இ-ம் :

அரக்கு பொன்னிற மாவதேன்? அனுமார் இலங்கை போவதேன்?

(4)

அரிதாரத்தால் அரிதாரத்தால்

வி-ம் : அரக்கைப் பொன்னிறமாக்க ‘அரிதாரம்' என்னும் பொடியைத் தூவிக் காய்ச்சுவர். அரிதாரம் + அத்து + ஆல்.

அனுமார் இலங்கைக்குச் சென்றது, சீதையைத் தேடுவதற்காக. அரி+தாரம்+அத்து+ஆல். அரியாகிய இராமன் மனைவியாகிய சீதையைத் தேடிக் காண்பதற்காக. தாரம் = மனைவி.

இடம் : :

அரிசி எருதில் ஏறுவதேன்?

அசடர் உழைக்காது இருப்பதேன்?

(5)

சாக்கிட்டு சாக்கிட்டு

வி-ம் : கோணிப் பையில் அரிசியை இட்டுக் கட்டி, அதனை எருதின் முதுகில் ஏற்றிச் செல்லுவர். சாக்கு + இ ட்டு. கோணியில் அள்ளிக்கட்டி.