உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 20.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தனிப்பாடல் கனிச்சுவை

103

1. பட்டு

சோழன் ஔவையார்க்கு ஒரு பட்டாடை வழங்கினான். அது மிக்க பெறுமானம் உடையது; அதனை வழங்குதலில் பெரிதும் மகிழ்ந்தான் சோழன். ஔவையார் தாம் வழங்கும் பாட்டினும் இப்பட்டோ சிறந்தது? எனத் தமக்குள் வினவினார். அதன் விடை யாக ஒரு பாட்டுப் பாடினார்.

வேந்தே! நீ தரும் பட்டாடை ஆயிரக்கணக்கான பொன் பெறுவதாக இருந்தாலும் நான்கு திங்கள் அளவில் கிழிந்துபோம். ஆனால் நான் வழங்கும் பாட்டு இருக்கின்றதே! அஃது, என்றாவது கிழியுமா? கிழியாது!" என்று கூறித் தாம் வழங்கும் பாட்டின் சிறப்பை நிலை நாட்டினார். உண்மைதானே! சோழன் வழங்கிய பட்டு இப்பொழுது உண்டா? ஆனால் ஔவையார் வழங்கிய பாட்டு இருக்கிறதே!

“நூற்றுப்பத் தாயிரம் பொன்பெறினு நூற்சீலை

நாற்றிங்கள் நாளுக்குள் நைந்துவிடும்-மாற்றலரைப் பொன்றப் பொருதடக்கைப் போர்வேல் அகளங்கா! என்றுங் கிழியாதென் பாட்டு.”

நாற்றிங்கள் - நான்கு மாதம். நைந்துவிடும் - கிழிந்துபோகும். மாற்றலர் - பகைவர்.

பொன்ற அழிய. பொருதடக்கை போர் செய்யும் வலிய கை. அகளங்கா களங்கமில்லாதவனே.