உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 20.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104

இளங்குமரனார் தமிழ் வளம் – 20

2. பொன்னாடு

ஔவையார் சேரநாடு சென்றார்; சேர வேந் தனைக் கண்டு அளவளாவினார்; தமக்கு ஓர் ஆடு வேண்டும் என்று வேந்தனிடம் கேட்டார். ஔவையார் பாலாடு கேட்டார் என்றாலும் வேந்தன் தன் கொடைச் சிறப்புப் புலப்படுமாறு ‘பொன் ஆடு' ஒன்று தந்தான். நல்லியற் புலமையாட்டியாகிய ஒளவையார் 'சேரா! உன்னாடு பொன்னாடு' என்றார். ‘உன் ஆடு பொன் ஆடு' என்றும் 'உன் நாடு பொன் நாடு' என்றும் பாருள் தந்து சேரனையும் அவைப் புலவர்களையும் இன்பத்தில் ஆழ்த்தியது. பின்னே ஒரு வெண்பாப் பாடினார். “யான் பால் சுரக்கும் ஆடு கேட்டேன்; அவனோ பொன்னாடு தந்தான்; ஒன்றைப் பெற விரும்புபவர் எதைத் தந்தாலும் பெறுவர்; ஆனால் கொடுப்பவர்களே தம் கொடையின் சிறப்பை அறிவர்” என்னுங் கருத்துடன் அமைந்தது அப்பாட்டு.

“சிரப்பான் மணிமுடிச் சேரமான் தன்னைச்

சுரப்பாடு யான்கேட்கப் பொன்னாடொன் றீந்தான் இரப்பவர் என்பெறினும் கொள்வர் கொடுப்பவர் தாமறிவார் தங்கொடையின் சீர்.”

சிரப்பான்

தலைமேல். சுரப்பாடு

கறவை ஆடு. இரப்பவர் ஒன்றைக் கேட்டு

வாங்குபவர். சீர் - சிறப்பு.