உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 20.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தனிப்பாடல் கனிச்சுவை

105

3. உண்டி

L பாண்டியனுக்குத் திருமணம் நிகழ்ந்தது; மன்னன் திருமணம் என்றால் மக்கள் கூட்டத்திற்கு அளவு இருக்குமா? எள் விழவும் இடமில்லாத கூட்டம். இந்தக் கூட்டத்துள் ஔவையாரும் அகப்பட்டுக் காண்டார். நிற்கவும் முடியவில்லை; இருக்கவும் முடியவில்லை; சோறு உண்ணவும் முடியவில்லை. இந்நிலையில் ஔவையாரைப் பார்த்துச், “சோறு உண்டீர்களா?” என வினவினார் ஒருவர்.

ஒளவையாருக்குத் திருமணக் கூட்டத்துள் தாம் பட்ட பாடு நினைவுக்கு வந்தது. ஒரு பாட்டும் வெளி வந்தது, அவர் என்ன உண்டார், என்ன உண்ணவில்லை என்பதை எவ்வளவு அழகாகச் சொல்லுகின்றார்! பட்டினியால் கிடைத்த பாட்டியின் பாட்டு இப் பொழுதும் சுவையூட்டுகின்றதைப் பாருங்கள்.

66

'வண்டமிழைத் தேர்ந்த வழுதி கலி யாணத்(து)

உண்ட பெருக்கம் உரைக்கக்கேள்-அண்டி

நெருக்குண்டேன் தள்ளுண்டேன் நீள்பசியி னாலே சுருக்குண்டேன் சோறுண்டி லேன்.

வழுதி – பாண்டியன். அண்டி - அண்மையில் சென்று. சுருக் குண்டேன்

சுருங்கப்பெற்றேன்.

குடல்