உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 20.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106

இளங்குமரனார் தமிழ் வளம் - 20

4. திரி

கோரைக்கால் என்பதோர் ஊர்; அவ்வூரிலிருந்த ஒருவன் கோரைக்கால் ஆழ்வான் எனப்பட்டான். அவனிடம் சென்று ஒளவையார் பாடினார்; பரிசு இல்லை என்று சொல்லி விடவும் அவனு க்குத் துணிவு வரவில்லை. ஏனெனில் ஒளவையார் பெருமை நாடெங்கும் பரவியிருப்பதையும் மன்னர்களும் மதித்து நடப்பதையும் அவன் அறிவான். ஆனால், கொடுக்கவும் மனம் வரவில்லை. அதற்காக ‘இல்லை' யென்று வாயால் சொல்லாமல், கொடுக்கமாட்டான் என்பதை ஔவையாரே அறிந்து கொள்ளுமாறு ‘அது தருவேன்'; 'இது தருவேன்' என்று நாளைக் கடத்தினான் அவன் கொடைச் சிறப்பை எப்படிப் பாராட்டுவார் ஔவையார்? ஒரு பாட்டுப் பாடினார்.

66

ஆழ்வான்,யானை தருகின்றேன்; குதிரை தருகின்றேன்; எருமை தருகின்றேன்; எருது தருகின்றேன்; என்று சொல்லிக் கடைசியில் சீலையுமாகித் திரிதிரியாய்ப் போய் விட்டது; நடந்து காலும் தேய்ந்து விட்டது” என்றார்.

66

“கரியாய்ப் பரியாகிக் காரெருமை தானாய்

எருதாய் முழப்புடைவை யாகித்-திரிதிரியாய்த்

தேரைக்கால் பெற்றுமிகத் தேய்ந்துகால் ஓய்ந்ததே கோரைக்கால் ஆழ்வான் கொடை.’

காரெருமை - கரிய எருமை. எருது - காளை. தேரைக்கால் பெற்று - தேரையின் கால்போல்

மெலிந்து.