உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 20.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தனிப்பாடல் கனிச்சுவை

111

கற்றவர்களின்முன்

9. பேச்சும் கீச்சும்

கல்லாதவர்களும் நல்லவர்கள் ஆகலாம். அவர்கள் சொல்லுதல் இல்லாமல் கேட்டுக் காண்டிருப்பவராக மட்டும் இருக்க வேண்டும் என்பார்

திருவள்ளுவர்.

ஒளவையார் அறிவுடையவர் ல்லாத இடத்தில் மனத்தில் தோன்றிய வாறெல்லாம் ஒருவன் பேசி விடலாம், ஆனால் அறிவுடையவர் முன் அப்படிப் பேசுதல் ஆகாது. பேசினால் பிழை பட்டுத் தலைக்குனிவே உண்டாகும்.

பேசிப் பழக்கப்பட்ட கிளியாக இருந்தாலும் கண்டாலே நடுங்கவைக்கும் கடுவன் பூனை வந்து விட்டால் அக்கிளியின் பேச்சு என்ன ஆகும். அது அச்சத்தால் கீச்சுக் கீச்சு என்று ஒலிக்க மட்டுமே செய்யும். இதனை,

66

காணாமல் வேணதெலாம் கத்தலாம்; கற்றோர்முன் கோணாமல் வாய் திறக்கக் கூடாதே - நாணாமல் பேச்சுப்பேச் சென்னும் பெரும் பூனை வந்தக்கால் கீச்சுக்கீச் சென்னும் கிளி”

என்று பாடினார்.

வேணது – விரும்பியது. நாணாமல் - அஞ்சி நடுங்காமல். பெரும்பூனை கடுவன் பூனை. வெருகு என்பதும் அது.