உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 20.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110

இளங்குமரனார் தமிழ் வளம் - 20

8. பழக்கமும் பண்பும்

பயிற்சியால் ஒவ்வொருவர்க்கும் வருவன சில; பயிற்சி யில்லாமல் பிறவியோடு வருகின்ற தன்மைகளும் உண்டு. ஆதலால் ஒருவர் ‘இயல் செயல்' என்பவை இவ்விரண்டையும் கொண்டே அமைகின்றன என்று அறிதல் வேண்டும்.

இவ்விரண்டன் தன்மையையும் எவரும் எளிதில் உணரும் வகையில் எடுத்துக்காட்டினார் ஔவையார். ஓவியம் ஓயாது வரைந்து பழகுதலால் அமையும்; நல்ல தமிழ் பேசுதல் நாளும் பழகுதலால் வரும்; கல்வி மனத்தே பதித்து வரப்படுத்துதல் வழியாக வாய்க்கும். ஆனால் ஒழுக்கம், நட்பு, இரக்கம், கொடை என்பவை பிறவிக் குணமாக அமையும் என்று கூறினார்:

சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம் வைத்ததொரு கல்வி மனப்பழக்கம்-நித்தம்

நடையும் நடைப்பழக்கம் நட்பும் தயையும் கொடையும் பிறவிக் குணம்.

என்பது அப்பாடல்.

- -

நித்தம் - நாள்தோறும். நடை - ஒழுக்கம். தயை - இரக்கம், அருள்.