உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 20.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தனிப்பாடல் கனிச்சுவை

109

7. கூடு

எல்லாவற்றையும் யான் செய்வேன் என்று ஒருவர் சொல்லிவிடவும் முடியாது. எதுவும் தெரியாதவர் என ஒருவரைத் தள்ளி விடவும் முடியாது. எல்லாம் தெரிந்த வர்க்குத் தெரியாததும் உண்டு. எதுவும் தெரியாதவர்க் கும் சில தெரிதல் உண்டு. இக் கருத்தை மக்களுக்குத் தெரிவிக்க ஔவையார் எண்ணினார். வரிசையாகச்சில கூடுகளைக் குறிப்பிட்டார். மக்கள் உடலும் 'கூடு' எனப்படுவது உண்டு அல்லவா!

குருவிக் கூடு, அரக்குக் கூடு, தேன் கூடு, சிலந்திக் கூடு, கறையான் கூடு இவற்றை நாம் செய்தல் அரிது. ஆனால் அவற்றைக் குருவி முதலியவை எளிமையாகச் செய்து விடுகின்றன. இதனால், ஒவ்வொருவர்க்கும் ஒவ்வொன்று எளிது. இதனை நினைத்தால் யான் வலியவன் என்று ஒருவன் தற்பெருமை கொள்ளல் முறையாகாது என்றார். இதனை விளக்கும் அவர் பாடல்:

66

வான்குருவியின் கூடு வல்லரக்கு தொல்கறையான்

தேன் சிலம்பி யாவர்க்கும் செய்யரிதால்-யாம் பெரிதும் வல்லோமே என்று வலிமை சொல வேண்டாங்காண் எல்லார்க்கும் ஒவ்வொன் றெளிது.”

தொல் - பழமை. சிலம்பி - சிலந்திக்கூடு.