உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 20.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108

இளங்குமரனார் தமிழ் வளம் – 20

6. போலி

போலித்தோற்றம் எவரையும் ஏமாறச் செய்யும். இல்லாத மதிப்பை யெல்லாம் உண்டாக்கும். செய்யாத சிறப்பெல்லாம் செய்ய வைக்கும். உண்மை தன்னை அறிமுகம் செய்து கொள்ளவோ தற்பெருமை கொள்ளவோ செய்யாது. யாராவது புகழ்ந்தாலும் நாணுமே ஒழியத் தலைநிமிர்ந்து கேளாது.

பொதுவாக இவ்வியல்பை, புலவர் சிலர் பொய்த் தோற்றம் காட்டி விளக்கினார் ஔவையார்.

அறிவாளர் ர் இ இருவர் புகழவேண்டும்; விரல்களில் மோதிரங்கள் வேண்டும். இடுப்பில் உயரிய உடை வேண்டும். இவ்வளவு இருந்தால் அப்புலவர் பாட்டு நஞ்சாக இருந்தாலும் வேம்பாக இருந்தாலும் நல்லதாக மதிக்கப்படும் என்னும் பொருளில் ஒரு பாடல் பாடினார்; அது

66

விரகர் இருவர் புகழ்ந்திடவே வேண்டும்

விரல் நிறைய மோதிரங்கள் வேண்டும்-அரையதனில் பஞ்சேனும் பட்டேனும் வேண்டும்; அவர்கவிதை நஞ்சேனும் வேம்பேனும் நன்று”

விரகர் – அறிவாளர். அரை - இடுப்பு. பஞ்சு - பருத்தியுடை.