உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 20.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118

இளங்குமரனார் தமிழ் வளம் – 20

16. துரும்பு

துரும்பு என்பது மிகச் சிறிய தாள், ஈர்க்கு முதலியன சிலர்க்குப் பெரிதாகத் தோன்றுவனவும் சிலர்க்குத் துரும்பு போல் சிறிதாகத் தோன்றுதல் நாம் காணக் கூடியதே.

எறும்பு கடித்தால் தாங்காதவர்கள் உண்டு. தேள் கடித்தாலும் தேய்த்துவிட்டுப் போவார் உண்டு. சல்லிக் காசு தரவும் சங்கடப்படுவார் உண்டு. கோடி கொடுக்கவும் முந்துவார் உண்டு. இவற்றை எண்ணிய ஔவையார் கூறுகிறார்.

பெரிய கொடையாளனுக்குப் பொன் துரும்பு போன்றது; துணிவானவனுக்குச் சாவு துரும்பு போன்றது; ஐம்புல அடக்கம் உடையவர்க்குப் பாலின்பம் துரும்பாகும்; பற்றற்ற துறவியர்க்கு ஆளும் அரசனும் துரும்பு ஆவான். பொது மக்களால் பெரிது பெரிதாக எண்ணப் படுவனவெல்லாம் இவர்களுக்குத் துரும் பாகத் தோன்றுவனவாம் என்கிறார்:

“போந்த உதாரனுக்குப் பொன் துரும்பு; சூரனுக்குச் சேர்ந்த மரணம் சிறு துரும்பு - ஆய்ந்த அறிவோர்க்கு நாரியருத்துரும்பாம்; இல்லத் துறவோர்க்கு வேந்தன் துரும்பு”

போந்த

-

போய. உதாரன் கொடையாளன். சூரன்

வீரன். நாரியர் - பெண்டிர்.

இல்லத் துறவோர் - குடும்பப்பற்று விட்டவர்.