உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 20.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தனிப்பாடல் கனிச்சுவை

119

17. கையூட்டு

முறையாக ஒன்றைச் செய்வது ஊழ் எனப்படும். அதற்கு மாறாகச் செய்வது ஊழல் எனப்படும். ஊழ் அல்லாதது ஊழல்.

காட்டின் இடையே ஒரு நெல்லிமரம் பட்டுப் போய் இலையுதிர்ந்து காணப்பட்டது. அதனை ஒருவர் ஔவையார்க்குக் காட்டிபக்கத்து மரங்கள் எல்லாம் பசுமையாக இருக்கவும் இம்மரம் பட்டுப் போயது ஏன் என்றார். வினாவியவர் மட்டுமன்றி யார் யாரும் அறம் காக்க வேண்டும் என்பதை அறிவுறுத்துவார் போல ஒளவையார் கூறினார்.

கற்றவர்களே, வளமான காட்டிலே நெல்லி மரம் இலையுதிர்ந்து பட்டுப் போய் நிற்பதேன் என வினாவு கின்றீர்; கேளுங்கள். வழக்குத் தோற்றுப் போகும் என்பதை உணர்ந்து அதனை வெற்றியாக்குவதற்காகக் கையூட்டுப் பெற்று வெல்லச் செய்யும் சூழ்ச்சிக்காரன் சுற்றத்தைப் போல் இம்மரம் அழிந்தது என்றார். கையூட்டுப் பெற்றவனை அன்றி அவன் சுற்றமும் அழியும் என்பது அறக்காவல் பற்றிய ஆக்க உரையாம்.

66

“கல்வி உடையீர்! கருங்கா னகத்திடையே

நெல்லி இலையுதிர்ந்து நிற்பதெவன்? - வல்லாய்கேள் வெல்லா வழக்கை விலைவாங்கி வெல்விக்கும் வல்லாளன் சுற்றம்போல் மாண்டு

கரும்கானகம் - அடர்ந்தகாடு. விலை வாங்கி – விலைக்கு வாங்குதல் போல் பணத்தால் வெற்றியை வாங்கி. வெல்விக்கும் - வெற்றிபெறச் செய்யும். வல்லாளன் - சூழ்ச்சிக்காரன்.