உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 20.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120

இளங்குமரனார் தமிழ் வளம் - 20

18. நாட்டுவளம்

ஒவ்வொரு நாட்டுக்கும் பெருமை தருவனவாகச் சில பொருள்கள் உண்டு. அப்பொருள்களால் அந் நாட்டுக்கே பெருமை ஏற்படுவதும் உண்டு. சென்னை 'மெரினா கடற்கரை’ உலகப் புகழ் வாய்ந்தது. குற்றால அருவி இந்தியப் புகழ் உடையது. இவ்வாறே முற் காலத்தில் இருந்த சேர, சோழ, பாண்டிய, தாண்டை நாடுகளின் பெருமையெனப் பேசப்பட்டவற்றை ஔவையார் ஒரு பாடலில் கூறினார்.

சேர நாட்டுக்குச் சிறப்பு யானைவளம்; சோழ நாட்டுக்குப் பெருமை சோற்றுவளம்; பாண்டிய நாட்டுக்குப் பெருமை முத்துவளம்; தொண்டை நாட்டுக்குப் பெருமை சான்றோர் வளம்;

என்றார் அப்பாடல்:

66

“வேழம் உடைத்து மலைநாடு; மேதக்க

சோழ வளநாடு சோறுடைத்து - பூழியர்கோன்

தென்னாடு முத்துடைத்து; தெண்ணீர் வயல்தொண்டை நன்னாடு சான்றோர் உடைத்து”

யானை. மலை நாடு – சேரநாடு. பூழியர்கோன் – பாண்டியன். தெண்ணீர்

வேழம் தெளிந்த நீர்.