உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 20.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தனிப்பாடல் கனிச்சுவை

121

19. தீயவை நீங்கும்

ஒருவர் வாழ்வில் அறம் தலைப்படுமானால் அதற்கு மாறான பாவம் தானே ஒழிந்து விடும். அவ் வறம் என்பது எளிமையானது; எவர்க்கும் செய்யக் கூடுவது. எப்பொழுதும் நன்மை உண்டாக்குவது.

இவ் வறத்தை இன்ன தென விளக்கும் ஔவையார், அறத்தின் பயனையும் உரைக்கிறார். பசித்தவர் முகம்பார்த்து அவர்க்கு உணவு கொடுங்கள். இச் செயல் அறச் செயல் என்பதை எண்ணி அதனைக் கடைப்பிடியாகக் கொண்டு வாழுங்கள் உண்ணும் போதில் ஒருவர் வரின் உள்ளதைப் பகுத்து உண்ணுங்கள். தெய்வம் பலப்பல இல்லை; ஒன்றே என்று உணருங்கள். இவற்றைச் செய்தால் தீராத தீமைகள் எல்லாமும் தீர்ந்து போகும்.

66

"ஐயம் இடுமின்; அறநெறியைக் கைப்பிடிமின்

இவ்வளவே னும் அன்னம் இட்டுண்மின் - தெய்வம் ஒருவனே என்ன உணரவல் லீரேல் அருவினைகள் ஐந்தும் அறும்.

ஐயம்

பிச்சை. அன்னம்

சோறு. அருவினை - நீங்காத தீச் செயல். ஐந்து

ஐம்பொறிகள் வழியாகவும் ஏற்படும் தீமைகள். அறும் – நீங்கும்.