உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 20.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122

இளங்குமரனார் தமிழ் வளம் - 20

20. அரிதில் அரிது

எல்லாரும் எளிதாகச் செய்வனவும் உண்டு. அரிதாகச் செய்வனவும் உண்டு. ஓர் அரிய செயலுக்கும் அரிய செயலும் உண்டு. அப்படிப்பட்ட அரிய செயல் களை அடுக்கிக் கூறுகிறார் ஒளவையார்.

பலரும் படித்துணருமாறு ஏட்டில் எழுதுவது அரியதாகும்; தாம் முன்னர் எழுதிய எழுத்தே எனினும் தாமோ பிறருமோ பிழை இல்லாமல் வாசிப்பது அரிதாகும்; அன்றியும் அதனை முழுவதாகக் கற்றுக் கொள்வது அரிது; அக் கல்வியால் ஆகும் பயனைக் கண்டு கொள்வது அதனினும் அரிதாகும். அவ்வாறு கண்டாலும் கண்ட நிலையிலேயே உறுதிப்பிடியாக வாழ்வது அரிதாகும்.

இச் செய்திகளைக் கூறும் பாடல்: எழுதரிது; முன்னம் எழுதிய பின்னர்ப் பழுதறவா சிப்பரிது; பண்பாய் - முழுதுமதைக் கற்பரிது; நற்பயனைக் காண்பரிது; கண்டக்கால் நிற்பரிது, தான் அந் நிலை.

முன்னம் - முன்பு. பழுது - குற்றம். அற - நீங்க. கற்பு- கற்பது. நிற்க - நிற்பது. காண்பு

- காண்பது.