உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 20.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126

இளங்குமரனார் தமிழ் வளம் – 20

24. தலை

முருகனுக்குத்தான் ஆறுதலை உண்டு என்பதை அறிவோம்; அவன் பெயரே ‘ஆறுமுகன்' ‘சண்முகன்’ அல்லவா!

காளமேகப் புலவர், சங்கரனுக்கு மாறுதலை யாம்! பிள்ளையார்க்கு மாறுதலையாம்; திருமாலுக்கு மாறுதலையாம்; சிவன் அடியார்க்கு மாறுதலையாம்! என்று பாடினார்.

சங்கரனாகிய சிவபெருமான் தலையில் கங்கை ஆறு இருப்பதால் அவருக்கு ‘ஆறுதலை’. பிள்ளையார்க்கு மனிதத் தலையில்லை, யானைத்தலை ஆதலால் மாறுதலை. சங்கம் ஏந்தியாகிய திருமால் மீன் ஆமை பன்றி எனப் பல பிறப்புகள் அடைந்தமையால் அவர் தலையும் ‘மாறுதலை’. இறைவன் திருவடியை அடைந்த அடியார்க்கு வாய்ப்பது ஆறுதலை இளைப்பாறுதல்)

ஆறுதலையும்

மாறுதலையும் செய்யும் அழகு

விளையாட்டு இஃது அல்லவா?

“சங்கரர்க்கு மாறுதலை; சண்முகர்க்கு மாறுதலை; ஐங்கரர்க்கு மாறுதலை ஆனதே-சங்கைப் பிடித்தோர்க்கு மாறுதலை; பித்தாநின் பாதம் படித்தோர்க்கு மாறுதலை பார்.

ஐங்கரர் பிள்ளையார். நான்கு கைகளும் துதிக்கை ஒன்றும் ஆகிய ஐந்து கைகளையுடையவர். பித்தா - சிவனே. பாதம் படித்தோர் - திருவடியை அடைந்த அடியார், படிந்தோர், படித்தோர் என்று வல்லினமாயது.