உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 20.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தனிப்பாடல் கனிச்சுவை

127

25. அரியாசனம்

நாட்டை ஆள்பவர் வேந்தர் எனப் பெற்றனர்! அவர்க்கு இணையாகக் கவிஞரும் போற்றப் பெற்றனர்! அரசர்க்கு உயர்ந்த அரசராகவும், அரசரே பணி செய்யும் அரசர்க்கு அரசராகவும் புலவர்கள் விளங்கிய வரலாறுகள் பல உண்டு. புவியரசர், கவியரசர் என்றும், புவிவேந்தர் கவிவேந்தர் என்றும் புவிச் சக்கரவர்த்தி, கவிச்சக்கரவர்த்தி என்றும், கோவேந்தர் பாவேந்தர் என்றும் இவற்றைப் போல் பிறவாறும் காவலரையும் பாவலரையும் இணைத்துப் பேசும் சொற்கள் உண்மையே இதற்கு எடுத்துக் காட்டாம்.

அரசருடன் கற்றோர்க்கு ஒப்பான பெயரும் புகழும் பேறும் வாய்த்தது எதனால்? கலையால் தானே! ஆதலால் கலைமகள் அவ்வுயர்வைத் தமக்கு அருளிய தாகப் பாராட்டி வாழ்த்தினார் காளமேகப் புலவர்.

"வெண்பட்டு உடுத்தியவள்; வெண்ணிற அணிகள் பூண்டவள்; வெண்டாமரையில் இருப்பவள்; வெண் மலர் பரப்பிய அரியணையில் (சிம்மாசனத்தில்) அரசர் களோடு என்னைச் சரிநிகராக வைத்தவள்; அன்னை கலைமகளே”

“வெள்ளைக் கலையுடுத்து வெள்ளைப் பணிபூண்டு வெள்ளைக் கமலத்து வீற்றிருப்பாள் – வெள்ளை அரியா சனத்தில் அரசரோ(டு) என்னைச்

சரியா சனம்வைத்த தாய்.

கலை

ஆசனம்.

உடை. பணி அணிகலம். கமலம் தாமரை. சரியாசனம் இணையான