உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 20.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128

இளங்குமரனார் தமிழ் வளம் – 20

26. ஆறுமுகன் பெருமை

ஆறுமுகன் பெருமை அளவுக்கு உட்பட்டதன் திருமுருகாற்றுப்படை, திருப்புகழ், கந்தரலங்காரம், கந்த புராணம் ஆகியன அவன் அழகியல்களைக் கொள்ளை கொள்ளையாய் விரிக்கும்! வசைபாடுதலில் தேர்ந்த காளமேகப் புலவர் முருகனையும் விட்டு வைத்தாரா? இகழ்வது போலப் புகழ்ந்து இன்பம் பெருக ஒரு பாட்டுப் பாடினார். “இகழ்வது போல் புகழ்தல்" என்று இத்தகைய பாடல்களை அணி இலக்கணம் கூறும்.

ஆறுமுகனுக்கு அப்பனாகிய சிவபெருமான் இரந்து உண்பவன்; அவன் ஆத்தாள் ஆகிய பார்வதி மலைநீலி; மாமனாகிய கண்ணன் உறிதிருடி; அண்ணன் விநாயகனுக்குச் சப்பைக்கால்; பெருவயிறு; வையெல்லாம் ஆறுமுகன்

பெருமை அல்லவா?

66

அப்பன் இரந்துண்ணி ஆத்தாள் மலைநீலி ஒப்பரிய மாமன் உறிதிருடி - சப்பைக்கால் அண்ணன் பெருவயிறன் ஆறுமுகத் தானுக்கிங்(கு) எண்ணும் பெருமை இவை.

இரந்து உண்ணி - இரந்து உண்பவன். மலைநீலி

மலை யரசன் பெற்ற கரிய மகள்.

ஒப்பரிய - ஒப்பில்லாத. சப்பைக்கால் - நடக்க ஓட முடியாத கால். எண்ணும் பெருமை

நினைக்கும் பெருமை.