உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 20.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தனிப்பாடல் கனிச்சுவை

129

27. ஏழை

“ஏழையைக் கண்டால் மோழையும் பாயும்" என்பது பழமொழி. மோழை - கொம்பில்லாத கடா; கொம்பில்லாத கடாவே பாயுமென்றால் மற்றவை பாயக் கேட்பானேன்!

காளமேகப் புலவர்க்குச் சிவபெருமான் ஏழை யாகத் தோன்றினார். 'இரந்து உண்பவர்’ ஏழை என்று தானே மதிக்கப் பெறுவர்?

சிவபெருமான் ஏழையானதால் என்ன நேரிட்டது? தலையின்மேல் ஒருத்தி (கங்கை) ஏறிக்கொண்டாள்; செருப்பைப் போட்டு மிதித்தான் ஒருவன் (கண்ணப் பன்); ‘பித்தன்’ ‘பேயன்’ என்று ஒருவன் வைதான் (சுந்தரமூர்த்தி நாயனார்)வில் முறிய அறைந்தான் (அருச்சுனன்) ஒருவன்! இவ்வளவும் நீ ஏழையாய் ல்லை யென்றால் ஏற்பட்டு இருக்குமா?

66

ப் பாடலும் இகழ்வது போல் புகழ்ந்தது ஆகும்.

“தாண்டி ஒருத்தி தலையின்மேல் ஏறாளோ?

பூண்டசெருப் பாலொருவன் போடானோ? - மீண்டொருவன் வையானோ? வில்முறிய மாட்டானோ? தென்புலியூர் ஐயாநீ ஏழையா னால்.

99

தென் புலியூர் சிதம்பரம். பூண்ட - காலில் அணிந்த. போடுதல் என்றது இங்கே மிதித்தலை