உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 20.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130

இளங்குமரனார் தமிழ் வளம் - 20

28. மருத்துவர் வீட்டில் மாறாநோய்

"மருத்துவருக்கும் நோய்; மருத்துவர் வீட்டா ருக்கும் நோய்; இவ்வாறிருக்க அந்த மருத்துவர் ஊரார் நோயைப் போக்குவது எப்படி?"- இவ்வாறு புள்ளிருக்கும் வேளூர்ப் பெருமானை வினவுகிறார் காளமேகப் புலவர்.

புள்ளிருக்கும் வேளூர் இறைவன் பெயர் வைத்திய நாதர் என்பது; வைத்திய நாதராகிய அவருக்கு வாதக் கால்; மைத்துனராகிய திருமாலுக்கு நீரிழிவு; பிள்ளை யாம் விநாயகருக்குப் பெருவயிறு; இந்த வினை தீர்க்க இயலாத இவர் எந்த வினை தீர்ப்பார்? எனக் கேட்கின்றார் புலவர்.

வாதநோய் உடையவர் அந்நோய் வலியால் ஒவ் வொரு வேளை தம் காலைத் தூக்கிக் கொண்டிருப்பர். இவரோ நடராசர்; ஆதலால் கால் தூக்கி ஆடும் இவர் வாதக் காலராம்.

திருமால் நீரில் (கடலில்) படுத்திருப்பவர்; ஆதலால் அவர்க்கு நீரிழிவாம்.

பிள்ளையார் வயிறு மத்தள வயிறு ஆதலால் வயிறு வீங்கு நோய் உடையவராம்! எள்ளுதலால் எத்தனை இன்பச் சுவை!

66

'வாதக்கா லாந்தமக்கு; மைத்துனர்க்கு நீரிழிவாம்;

பேதப் பெருவயிறாம் பிள்ளைதனக்(கு); - ஓதக்கேள்

-

வந்தவினை தீர்க்க வகையறியா வேளூரார்

எந்தவினை தீர்ப்பார் இவர்?"

பேதம்-மாறுபாடு. ஒதக் கேள்-சொல்லக்கேள். வேளூர் -புள்ளிருக்கும் வேளூர்

(வைத்தீசுவரன் கோயில்)