உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 20.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தனிப்பாடல் கனிச்சுவை

131

6

29. கால்

பூனைக்கு எத்தனை கால்? பறவைக்கு எத்தனை கால்? ஆனைக்கு எத்தனை கால்? "இவை தெரியாவா எங்களுக்கு என்று நீங்கள் நினைக்கலாம். காளமேகப் புலவர் சொல்கிறார்: பூனைக்கு ஆறு கால்; பறவைக்கு ஒன்பது கால்; ஆனைக்குப் பதினேழு கால்! இப்படி ஒருவர் சொன்னால் மூளைக்கோளாறு என்றே முடிவு கட்டி விடுவோம். ஆனால் சொல்பவர் கவி காள மேகம் அல்லவா! இன்னும் விட்டாரா? தாமரைக் குள்ளே நீலப் பூக்கள் பூத்தனவாம். அதனைக் கண்டாராம்; ஆனால் வேறொருவரும் சொல்லக் கேட்ட தில்லையாம்! வியப்புக்கு மேல் வியப்பான செய்தி!

பூ நக்கி எது? தேனீ! அதன் கால்கள் ஆறு. பூ நக்கி ஆறு கால். ஒன்பது கால் எத்தனை? இரண்டே கால்! பறவைகளுக்கு இரண்டு கால்கள் தாமே. பதினேழு கால் எத்தனை? நாலே கால்! யானைக்கு நாலே கால்கள் தாமே!

தாமரை போன்ற முகத்திலே நீலவிழிகள் இரண்டு ருப்பது நீலமலர்கள் பூத்தது போன்றனவாம்.

“பூ நக்கி ஆறுகால் புள்ளினத்துக் கொன்பதுகால்

ஆனைக்குக் கால்பதினே ழானதே - மானேகேள்!

முண்டகத்தின் மீது முழுநீலம் பூத்ததுண்டு

கண்டதுண்டு கேட்டதில்லை காண்.

புள் - பறவை. முண்டகம் - தாமரை. நீலம் – நீலப்பூ(கருங்குவனை). காண் - ஆராய்ந்து கூறு.