உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 20.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132

இளங்குமரனார் தமிழ் வளம் – 20

பூக்கும்.

30. ஆவரை

ஆவரை என்னும் செடி அழகிய மஞ்சள் நிறப் பூக்களைப் ஆதலால் அதனைப் பொன்னா வரை வரை என்பர். பொன்னாவரைச் செடி ஒன்று பூத்துக் காய்த்துப் பொலிவோடு விளங்குவதைக் காளமேகப் புலவர் கண்டார். அவர் உளத்தைக் கவர்ந்த அச் செடி ஒரு பாட்டையும் பெற்றுப் பெருமை யடைந்தது.

இலை காய் பூ இவற்றுடன் விளங்கிய பொன்னா வரைக்குள் திருமால் வரலாறுகளில் பலவற்றை அடக்கி விட்டார் காளமேகப் புலவர். 'வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்’ என்பது பழமொழி அல்லவா!

திருமால் உடையாக உடுத்தியது பொன்னாடை(பொன்). கண்ணன் அவதாரத்தில் மேய்த்தது பசு(ஆ). பசுக்களைக் காப்பதற்காகக் குடையாக எடுத்தது மலை(வரை). ஊழிக் காலத்தில் படுத்தது ஆலிலை (இலை). பசுக்கன்றின் வடிவில் வந்த அசுரனைத் தூக்கி விளாமர வடிவில் நின்ற அசுரன்மேல் எறிந்து காயுதிரச் செய்தார்(காய்). மாவலியினிடம் மூன்றடிமண் (பூ) இரந்தார். இவற்றை முறையே அமைத்துப் ‘பொன் னாவரையிலை காய் பூ’ எனப் பாட்டை முடித்தார்.

“உடுத்ததுவும் மேய்த்ததுவும் உம்பர்கோன் தன்னால்

எடுத்ததுவும் பள்ளிக் கியையப் - படுத்ததுவும்

அந்நாள் எறிந்ததுவும் அன்பின் இரந்ததுவும்

பொன்னா வரையிலைகாய் பூ.

உம்பர்கோன் இந்திரன். பள்ளி படுக்கை. உடுத்தது பொன், மேய்த்தது ஆ என்பனபோலப் பொருத்திக்கொள்க.