உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 20.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தனிப்பாடல் கனிச்சுவை

133

31. டுடுடுடுடு

கேட்டவர் கேட்டபடி உடனே பாடுவதில் மிகத் தேர்ந்தவர் காளமேகப் புலவர். அவரிடம் ஒருவர் “ஐந்து ‘டு’ தொடுத்து வருமாறு ஒரு வெண்பாப் பாட வேண்டும்” என்றார். ஒலிக் குறிப்பாகத்தான் ‘டுடு டுடு' என வரும்; அருணகிரியார் பாட்டில் அவ்வாறு வந்துள்ளது. பொருள் தரும் சொல்லாக எப்படி ஐந்து 'டு' வை அடுக்குவது?

காளமேகப் புலவர் அழகாக அடுக்கிப் பொருளும் அணியும் சிறக்க ஒரு பாடல் செய்தார். குடந்தை நகரில் அவர் இருந்தபோது இதனைப் பாட நேர்ந்தமை யால், “குடந்தைச் சிவபெருமான் கையில் எடுப்பது 'ஓடு'; நடமிடுவது ‘காடு’; ஏறுவது ‘மாடு'; அடியார்க்குத் தருவது ‘வீடு'; காதில் அணிவது தோடு' என்றார். ஐந்து 'டு' வரும் சொற்கள் உள்ளன அல்லவா. முன் ஐந்து எழுத்துக்களையும் தனியே பிரித்து “ஓ கா மா வீ தோ” என முன்நிறுத்தி ‘டு டு டு டு டு' என ஐந்து ‘டு’வையும் பின்நிறுத்தி நிரல் நிறையணி என்னும் பெயர் பெற வைத்தார்.

66

ஓகாமா வீதோ உரைப்பன் டுடுடுDA

நாகார் குடந்தை நகர்க்கதிபர் - வாகாய் எடுப்பர் நடமிடுவர் ஏறுவர் அன்பர்க்குக் கொடுப்பர் அணிவர் குழைக்கு.

وو

நாகார் - வளமமைந்த. அதிபர் – தலைவர். வாகாய் - திறமையாய். குழைக்கு – காதிற்கு. எடுப்பர் ஓடு, நடமிடுவர் காடு, ஏறுவர் மாடு, கொடுப்பர் வீடு, அணிவர் தோடு எனப் பொருத்துக.