உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 20.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134

இளங்குமரனார் தமிழ் வளம் – 20

32. மா

திருநாவுக்கரசர் பிறந்த பெருமை மிக்கது திருவாமூர் அதனால் திருவாமூரைத் ‘திரு ஆம் ஊர்’ என்று இரு பொருள் அமையக் கூறிப் பேருவகை கொண்டார் சேக்கிழார் பெருமான். அத் திருவாமூரில் வேங்கட முதலியார் என்னும் ஒருவர் ருந்தார். அவர் காளமேகப் புலவர்க்கு அன்பர். ஒரு முறை ஆமூர் சென்ற காளமேகப் புலவர் முதலியார் குதிரையைக் கண்டு வியந்தார். அதன் அழகிலே ஈடுபட்டு அரிய பாட்டொன்று பாடினார்.

ஆமூரைக் குறிக்கும்போது சேக்கிழாரைப் போலவே இரு பொருள் வரக் கூறினார். பிழைக்க ஆறு (வழி) ஆமூர், பதினாறு பேறுகளும் ஆமூர் என்று குறிக்குமாறு, “ஆறும் பதினாறும் ஆமூர்" என்றார்.

ஆமூர் வேங்கட முதலியார் ஏறும் மாவே ஏற்ற மா ஆகும். மற்றையோர் ஏறும் மாவெல்லாம் ‘வெந்தமா’ ‘சும்மா’ “வெறும் மா’ ‘களி கிண்டுவதற்கு வந்த மா' என்றே கூறலாம் என்றார். இப் பாட்டைத்தம் இனிய மாமனிடம் கூறுவதுபோல் முடித்தார்.

66

"ஆறும் பதினாறும் ஆமூரில் வேங்கட்டன்

ஏறும் பரிமாவே ஏற்றமா - வேறுமா வெந்தமா சும்மா வெறும்மா களிகிளற வந்தமா சந்தமா மா.

وو

பரிமா - குதிரை. சந்த மாமா இனிய மானனே. மா குதிரை என்றும் மாவு என்றும் பொருள் பெறும்.