உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 20.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தனிப்பாடல் கனிச்சுவை

141

39. பணிவிடை

நேராக ஒன்றாகச் சொல்லலினும் சுற்றிச் சொல்லல் பொருள்காண அரிதெனினும் பொருள் காணும்போது சுவையும் அதிகமாம். அப்படிப்பாடிய ஒரு பாடல் வருகிறது; காளமேகப் புலவர் பாடியது.

பண்புள்ளவருக்கு ஒரு பறவைப் பெயர் (ஈ); பாவம் செய்வதற்கு ஓர் இலக்கம் (அஞ்சு) நட் பில்லாதவரைக்கண்டால் நாற்காலி (விலங்கு, விலகு); சொக்கர்க்கு அரவம் (பணி) வாகனம் (விடை) நல்ல நிலம் (செய்). எடுப்பும் முடிப்புமாக அமைந்த அருமை யது இது.

66

'பண்புளருக் கோர்பறவை; பாவத்திற் கோரிலக்கம்; நண்பிலரைக் கண்டக்கால் நாற்காலி - திண்புவியை ஆள்வார் மதுரை அழகியசொக் கர்க்கரவம் நீள்வா கனநன் னிலம்”

நண்பிலர் பகைவர்; புவி உலகம்; அரவம் - பாம்பு; அதன் மற்றொரு பெயர் பணி; வாகனம் காளை (விடை) நிலம் - செய்; நன்செய்.