உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 20.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140

இளங்குமரனார் தமிழ் வளம் – 20

38. பூசுணை

க்

கொண்டத்தூர் என்பதோர் ஊர்; அவ்வூரில் தண்டை கால் அம்மை என்றோர் அம்மையர் இருந்தார். அவர் சமையற் கலையில் மிகத் தேர்ந்தவர்; ஒருபோது பூசுணைக்காயைச் சுவையாகக் கறியாக்கிக் காளமேகப் புலவருக்கு உணவு வழங்கினார். புலவர் பூசுணைக்காய்க் கறியின் சுவையில் ஈடுபட்டுச் சுவையான ஒரு பாட்டுப் பாடினார்.

6

கொண்டத்தூர் தண்டைக்கால் அம்மையார் சமைத்த பூசுணைக்காய்க் கறியைக் கண்டவர் கைலாயம் கண்ட இன்பம் பெறுவர்; கையில் எடுத்து உண்டவர் முத்தியே பெற்றவராவர்; அதன் சுவை தேவர்க்கும் சிவபெருமானுக்கும் உரியதாக அமையும்.

“கண்டக்காற் கிட்டும் கயிலாயம்; கைக்கொண்டுட்

கொண்டக்கால் மோட்சம் கொடுக்குமே;-கொண்டத்தூர் தண்டைக்கால் அம்மை சமைத்துவைத்த பூசுணிக்காய் அண்டர்க்காம் ஈசர்க்கு மாம்.’

கண்டக்கால் - கண்டபோது. அண்டர் - தேவர். ஈசர் - சிவ பெருமான். பூசுணிக்காய் - பூசுணைக்காய்.