உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 20.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தனிப்பாடல் கனிச்சுவை

139

37. நராயணன்

கம்பர் 'நாராயணன்' என்னும் பெயரை ‘நராயணன் என்று பாடினார். 'நா' என்னும் நெடிலை நடிலை ‘ந’ என்னும் குறிலாகப் பாடியதைக் காளமேகப்புலவர் விரும்பவில்லை. ஆதலால் அதனைச் சுட்டிக்காட்டி ஒரு பாட்டுப் பாடினார்.

66

“கம்பர் நாராயணனை நராயணன் என்று பாடியமையால் னி நான் ‘வார்' என்பதை ‘வர்’ என்பேன்; 'வாள்' என்பதை 'வள்' என்பேன்' 'நார்' என்பதை ‘நர்' என்பேன். 'நான்' அல்லன் 'நன்' என்றார். இதனால் அவரவர் விரும்பிய வண்ணம் மொழியைச் சிதைப்பது முறையற்றது என்று காளமேகப் புலவர் கருதினார் என்பது தெளிவாகும்.

66

‘நாரா யணனை நராயணனென் றேகம்பன் ஓராது சொன்ன உறுதியால் - நேராக

வாரென்றால் வர்ரென்பேன் வாளென்றால் வள்ளென்பேன் நாரென்றால் நர்ரென்பேன் நன்.

وو

ஓராது - ஆராயாது.