உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 20.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138

இளங்குமரனார் தமிழ் வளம் – 20

36. காதவழி

விகடராமன் என்பவன் ஓர் அதிகாரி; அவன் வேதத்தில் தேர்ந்தவன்; அவனுக்கு ஒரு குதிரை இருந்தது; அதை அவன் பேணுவது இல்லை. ஆனால் எங்குச் சென்றாலும் அதன்மேல் ஏறிச் செல்ல அவன் தவறுவதில்லை. அவன் வேலைக்காரர்கள் பலர் இருந்த தால் அக் குதிரையை முன்னும் பின்னும் இழுத்தும் தள்ளியும் நடத்திச் சென்றனர். இக் காட்சியை ஒரு நாள் காளமேகப் புலவர் கண்டார். அந்த அழகுக் காட்சியை அழகிய பாட்டாகப் பாடினார்.

“எப்பொழுதும் வேதம் ஓதும் விகடராமன் குதிரையை மூன்று பேர் முன்னே இருந்து கடி வாளத்தைப் பிடித்து இழுப்பர்; பின்னே இருந்து இரண்டு பேர் தள்ளுவர்; இவ்வாறு மாதத்திற்குக் காததூரம் செல்லும்! அவ்வாறு காற்றாகப் பறக்கும்!”

"முன்னே கடிவாளம் மூன்றுபேர் தொட்டிழுக்கப்

பின்னே இருந்திரண்டு பேர்தள்ள - எந்நேரம் வேதம்போம் வாயான் விகடரா மன்குதிரை மாதம்போம் காத வழி.'

வேதம்போம் – வேதம் ஒதும். காதம் - பத்துக்கல் தொலைவு.