உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 20.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தனிப்பாடல் கனிச்சுவை

137

35. உமி

கரி உமி நினைப்பிலே காளமேகப் புலவர் இருந்தார். அவர் ஒரு வீட்டில் உண்ணச் சென்றார்; அவர்க்கு உறவினரானவர் வீடு அது. அங்கே அத்திக் காய்ப்பொரியல், வாழைக்காய் வாட்டல், மாங்காய்ப் பச்சடி, கத்தரிக்காய் நெய்த் துவட்டல் ஆகியவற்றை அவர் அத்தைமகள் ஆக்கி வைத்திருந்தாள். ஆனால் அவற்றில் உப்பு மட்டும் அளவுக்கு மிஞ்சி இருந்ததால் புலவரால் உண்ண முடியவில்லை. கறியைத் துப்புமாறு நேரிட்டது. இச் செய்தியை வைத்து ‘கரி’ என்று எடுத்து ‘உமி’ என்று முடித்தார்.

66

'கரிக்காய் பொரித்தாள்கன் னிக்காயைத் தீய்த்தாள்

பரிக்காயைப் பச்சடியாய்ப் பண்ணி - உருக்கமுள்ள அப்பைக்காய் நெய்த்துவட்ட லாக்கினாள் அத்தைமகன் உப்புக்காண் சீச்சீ உமி.”

கரி என்பது யானை: யானைக்கு அத்தி என்றொரு பெயர் உண்டு; ஆதலால் கரிக்காய் (அத்திக்காய்).

கன்னி என்பது பெண்ணையும் வாழையையும் குறிக்கும். இங்குக் கன்னிக்காய் வாழைக்காய்.

பரி என்பது குதிரை; குதிரைக்கு 'மா' என்னும் பெயருமுண்டாதலால் பரிக்காய் (மாங்காய்). அப்பை – அழகிய பையையுடைய பாம்பு. பாம்பில் கத்தரி என்பது ஒருவகை. ஆதலால் அப்பைக்காய் கத்தரிக்காய்.