உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 20.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136

இளங்குமரனார் தமிழ் வளம் – 20

34. கரி

நம்மிடம் உமி இருந்தால் கரியாக்கலாம்; உமிக் கரியாக்கிப் பல்லும் விளக்கலாம். ஆனால் காளமேகப் புலவரிடம் கரியும் உமியும் இருந்தால் சுவை மிக்க கவியாகத் திகழ்கின்றது.

பாடலைக் ‘கரி' என்று தொடங்க வேண்டும்; 'உமி என்று முடிக்க வேண்டும்! அப்படி ஒரு பாட்டு அன்று இரண்டு பாட்டுப் பாடினார்.

சிவபெருமான் ‘கரி'யை (யானையை) உரித்து அதன் தோலைப் போர்த்துக் கொண்டவர். ஆதலால் அவரை முன்னிறுத்திப் பாட்டைத் தொடங்கினார். தேவர்கள் அமுதம் கடைந்தபோது முதலாவது நஞ்சே வெளிப்பட்டது. அதனை உண்டு ‘நீலகண்டன்' ஆகிய வரும் சிவபெருமான். ஆதலால் அந் நஞ்சை இங்கே ‘உமி' என்று முடித்தார்.

"கரியதனை யேயுரிந்த கையா! வளையேந்(து) அரி அயற்கும் எட்டாத ஐயா! - பரிவாக

அண்டரெல்லாங் கூடி அமுதங் கடைந்தபொழு(து) உண்டநஞ்சை இங்கே உமி.

வளை

-

சங்கு. அரி – திருமால். அயன் - நான்முகன். பரிவாக - அன்பாக. அண்டர் -

தேவர். உமி - காறி உமிழ் (துப்பு).