உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 20.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தனிப்பாடல் கனிச்சுவை

143

41. நல்ல வாணிகம்

வாணிகர்க்கு ஓர் அரிய வாய்ப்பு இருப்பதை வள்ளுவர் எடுத்துக் காட்டினார். வாணிகத்தால் வாழ்வுக்கு வேண்டும் பொருள் ஈட்டுவதுடன் புகழ் வாழ்வுக்குரிய அருள் அறம் ஆகியவற்றையும் தேடிக் கொள்ள முடியும் என்றார். அதற்கு ஒரு வழி தம் பொருள் போலப் பிறர் பொருளையும் ஒப்ப மதித்து வாணிகம் செய்தல் வேண்டும் என்பது.

தண்டாங்கூர் என்னும் ஓர் ஊரில் வாணிகர் பண்டங்களை வாங்குதலிலும் விற்றலிலும் செய்தகேடு காளமேகப் புலவரால் அறியப்பட்டது. அவர் நேரே வணிகர்களை அழைத்தார். வழக்கம்போல் வந்த வசைப்பாட்டைப் பொழிந்தார். அவர்கள் குணக் கேட்டைக் கண்டித்ததுடன் மக்கள் படும் பாட்டையும்

பாட்டாக்கினார்.

தண்டாங்கூர் மாசனங்காள் சற்குணத்தீர் என்றிருந்தேன் பண்டம் குறையவிற்ற பாவிகாள் -பெண்டுகளைத் தேடியுண்ண விட்டீர் தெருக்கள் தெருக்கள்தொறும் ஆடிமுதல் ஆனிவரைக் கும்.

மாசனம்

பெருமக்கள். சற்குணம் நற்குணம். ஆடிமுதல் ஆனி வரை என்றால் ஆண்டு முழுவதும். ஆடி மாதம் வறட்சி மிக்க காலம்; அந்நிலையே வரும் ஆனிவரையும் என்பதாம்.