உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 20.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144

இளங்குமரனார் தமிழ் வளம் - 20

42. அலைந்தபாடு

காளமேகப்புலவர் அங்கும் இங்கும் போய்ச் சில வள்ளல்களைத் தேடினார். தேடி அலுத்த பாடு பெரி தாயிற்று. நடந்த களைப்பு சோர்வு - என்ற அளவோடு நிற்கவில்லை.

-

ஒருநாள் இருநாள் என்று இல்லாமல் நெட்ட நெடுங்காலம் வள்ளல்களைத் தேடி அலைந்தாராம். தம் உள்ளங்காலில் உள்ள வெண்ணிற எலும்பு தானும் தேயுமாறு தேடி அலைந்தாராம்! இந்த அலைவு எப்படி நீங்கியது?

ஆமூர் என்னும் ஓர் ஊர்க்குச் சென்றார். ஆங்கோர் வள்ளலைக் கண்டு கொண்டார். கண்டு கொண்டதற்குப் பின்னர், அதற்கு முன் அவரைக் காணாது அலைந்த பாடுகள் புலப்பட்டன. அப் புலப்பாடு பாட்டாகியது.

“உள்ளங்கால் வெள்ளெலும்பு தோன்ற ஒருகோடி வெள்ளங்கா லம்திரிந்து விட்டோமே - உள்ளபடி ஆமூர் முதலி அமரர்கோன் இங்கிருக்கப் போமூர் அறியாமற் போய்

என்பதுஅது.

வெள்ளம் – ஒரு பெரிய எண்ணிக்கை. அமரர்கோன் - தேவர் தலைவன், ஒப்பானவன்.

போம் - போகும்.