உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 20.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தனிப்பாடல் கனிச்சுவை

145

43. வாட்டம்

காளமேகப் புலவர் ஒருமுறை மதுரைக்குச் சென்றிருந்தார். அவரை அறிந்து பேணிக் கொள்வார் எவரும் வாய்க்கவில்லை. பொழுதும் இரவாகிவிட்டது. அவ்வேளையில் அவர்க்கு உணவுக்கும் படுத்து உறங்குவதற்கும் தக்க வாய்ப்புக் கிடைக்க வில்லை.

பசிவாட்டப்படுக்க வேண்டியவரானார். படுத்த இடத்திலோ கொசுக்கடி தாங்க முடியவில்லை. பசிக் கடியோ காலை நீட்டிப் படுக்க விடவில்லை. தப்பிப் தவறிக் கண்ணை மூடி உறங்க நேர்ந்தாலும் பக்கத்தே கட்டப்பட்டிருந்த மாடுகளின் மணியோசை கேட்டுத் தொடர்ந்து உறங்கவும் முடியவில்லை. அந்தத் துயரங்கள் ஒரு பாட்டாகின. புலவர் பட்ட துன்பமும் இன்பமும் சாவாவாழ்வு பெற்று விடும். இதோ அந்தப் பாட்டு: பாண்டியனை நினைத்துப் பாடியது.

“மசகம் இசைகாட்ட: மாடுமணி காட்ட; நிசியும் ஒருக்காலை நீட்டேன் - பசியால் வாடினேன் வாடி மனந்தளர்ந்து நானுன்னைத் தேடினேன் தென்னவரா யா

மசகம் கொசு. நிசி - இரவு. தென்னவர் ராயன் - பாண்டியன். தென்னாட்டு அரசன்.