உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 20.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146

இளங்குமரனார் தமிழ் வளம் – 20

44. அம் என்றால்

அதிமதுரக் கவிராயர் என்பவர் முதன் முறையாகக் காளமேகப் புலவரைக் கண்டார். இன்னார் என்று அறியாமல், “உம் பெயர் என்ன? நீர் பாடல் இயற்றுவீரா?” என்று வினவினார்.

று

அவ்வினாக்களைக் கேட்ட காளமேகர் தம் பேரையும் பாடற்சிறப்பையும் கூறும் வகையில் ஒரு பாடல் பாடினார்.

ம் என்று சொல்லுமுன் எழுநூறும் எண் ணூறும்

பாடுவோன்;

அம் என்று சொல்லுமுன் ஆயிரம் பாடுவேன்;

சும்மா அமைந்து இருக்கவும் செய்வேன். பாடும் எழுச்சி வந்துவிட்டால் பெரிய மழைப்பொழிவு போல்பாடல்பொழிவேன். காளமேகம் என்பது என்பெயர் என்றார். அப்பாடல்:

66

"இம்மென்னு முன்னே எழுநூறும் எண்ணூறும்

அம்மென்றால் ஆயிரம்பாட் டாகாதோ - சும்மா இருந்தால் இருந்தேன்; எழுந்தேனே யாயின் பெருங்காள மேகம் பிளாய்”

என்பது.

இம், அம் என்பவை ஒலிக்குறிப்புகள்; உடனே என்பது பொருள். பிளாய் - என்பது பிள்ளாய் என்பதன் தொகை. சிறு பிள்ளையாக எண்ணிச் சொல்லிய குறிப்பு இது.