உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 20.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தனிப்பாடல் கனிச்சுவை

147

45. கடையை மூடு

புலவருக்கும் புலவருக்கும் உண்டாகும் போட்டி புலமைக் காய்ச்சல் என்று சொல்லும் நிலை 16, 17, 18 ஆம் நூற்றாண்டு களில் மிக இருந்தது. அக்காய்ச் சலைப் பத்தொன்பதாம் ருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்த புலவர்கள் கதை கதையாகப் பின்னிவிட்டு மகிழ்வும் கொண்டார்கள். அவ்வகையில் அவர்களால் பின்னிப் போடப் பட்ட முடிச்சுகள் வரலாற்றுப் பார்வைக்கு ஒப்ப ஆகாததாகவும் அமைந்தன.

காளமேகப் புலவர் அதிமதுர கவிராயரைப் பழித்தார் என்றால் அதிமதுரம் அவரை விடுவாரா?

மூச்சு விடுமுன்னே முன்னூறு பாடுவாராம்; நானூறும் பாடுவாராம்; ‘ஆச்' என்று ஒரு தும்மல் போடும் நேரத்துள் ஆயிரம் பாட்டும் பாடுவாராம்; காளமேகப் புலவர் தம் கவிக் கடையை மூட வேண்டுமாம்;

மூச்சு விடுமுன்னே முன்னூறும் நானூறும் ஆச்சென்றால் ஆயிரம்பாட் டாகாதோ - பேச்சென்ன வெள்ளைக் கவிக்காள மேகமே நின்னுடைய கள்ளக் கவிக்கடையைக் கட்டு

என்றார்.

வெள்ளைக்கவி – பொருளில்லாப்பாடல். கள்ளக்கவி - வஞ்சம் - திட்டு – உடைய பாட்டு. கடையைக் கட்டுதல் - மூடுதல்.