உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 20.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148

இளங்குமரனார் தமிழ் வளம் – 20

46. சற்றே இரு

மதுரகவிராயர் என்பார் தொண்டை நாட்டு அமரம் பேட்டைச் சேர்ந்தவர். திருநின்ற ஊரினராகிய காளத்தியப்பர் என்னும் வள்ளலைக் கண்டு தம் வறுமை நீங்க நினைத்தார்.

சிலவற்றை நினைக்கும் போதே, இன்பம் சுரக்கும். அவற்றைப் பெற்றது போன்ற நிறைவும் ஏற்படும். வறுமையில் தவித்த மதுரகவி காளத்தியப்பரை நினைத்த அளவிலேயே தம் வறுமை தொலைந்ததாக எண்ணிப் பூரிப் படைந்தார்.

எப்பொழுதும் விடாமல் நிழலைப் போல் தொடரும் வறுமையே, நாளைக்கு நான் திருநின்ற ஊர் ஊர் சென்று காளத்தியாரைக் கண்டு விட்டேன் எனின் உனக்கும் எனக்கும் என்ன உறவிருக்கும்? இன்றைக்கு மட்டும் என்னோடு சிறிது இரு என்று பாடினார். அப்பாடல்:

நீளத் திரிந்துழன்றாய் நீங்கா நிழல்போல நாளைக் கிருப்பாயோ நல்குரவே - காளத்தி

நின்றைக்கே சென்றக்கால் நீயெங்கே? நானெங்கே? இன்றைக்கே சற்றே இரு.

என்பது அது.

நல்குரவு - வறுமை. நின்றை – திருநின்ற ஊர். சற்றே - சிறிது பொழுதே.